Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போர் மூளும் அபாயம்... வட கொரியா எச்சரிக்கை!

'எங்களைத் தாக்கும் எண்ணமிருந்தால் அதை அமெரிக்கா கைவிட வேண்டும்' என்று வட கொரியா எச்சரித்துள்ளது. மேலும், அமெரிக்க படைகள் தாக்குதலில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது என வட கொரியா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

வட கொரியாவின் அணு ஆயுத சோதனைகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தது. மேலும், வட கொரியாவை கட்டுப்படுத்த சீனாவுக்கும் அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில், 'எங்கள் நாட்டைத் தாக்கும் எண்ணமிருந்தால் அதை அமெரிக்கா கைவிட வேண்டும்' என்று வட கொரியா எச்சரித்துள்ளது. அண்மையில் சிரியாவில் ரசாயன தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக கூறி அமெரிக்கா, அந்நாட்டில் வான்வழி தாக்குதல் நடத்தியது அமெரிக்கா. மேலும், நேற்று ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்திலும் அமெரிக்கா சக்திவாய்ந்த தாக்குதல் நடத்தியது. இதையடுத்து அதிபர் ட்ரம்ப், 'வட கொரியா உலகத்துக்கே அச்சுறுத்தலாக உள்ளது' என்று விமர்சித்தார்.

இந்நிலையில் ட்ரம்பின் கருத்துக்கு பதிலளித்துள்ளது வட கொரியா, 'அமெரிக்காவின் செயல்களால் போர் மூளும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. எதிர்த்துத் தாக்க வட கொரியா அனைத்து விதத்திலும் தயாராக இருக்கிறது' என்று வட கொரியா தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்கா தனது கப்பற்படையை கொரியாவின் தீபகற்பத்தில் நிறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close