Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'அமெரிக்கத் தாக்குதலில் உயிரிழப்பு இல்லை' : ஐஎஸ் தீவிரவாதிகள் மறுப்பு!

ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் தீவிரவாதக் குழு இயங்கி வந்ததாகக் கருதப்படும் பகுதியில், அமெரிக்கா நேற்று விமானத் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலின்போது, 'வெடிகுண்டுகளுக்கு எல்லாம் தாய் (Mother of all bombs)' என்று அழைக்கப்படும் GBU-43 வெடிகுண்டை அமெரிக்கா வீசியது.

US Bombing


அமெரிக்கத் தயாரிப்பில் அணுகுண்டுகள் இல்லாத ரகத்தில், இதுதான் மிகப் பெரிய வெடிகுண்டு. சுமார் 9,797 கிலோ எடைகொண்ட இந்தப் பிரமாண்ட வெடிகுண்டை, ஈராக் போர் தொடங்குவதற்கு முன், கடந்த 2003-ம் ஆண்டு அமெரிக்கா பரிசோதித்துப் பார்த்தது. ஆனால், இதுவரை எந்தப் போரிலும் அமெரிக்கா இந்த வெடிகுண்டைப் பயன்படுத்தியதில்லை. 


இதையடுத்து, இந்தத் தாக்குதலில் 36 ஐஎஸ் தீவிரவாதிகள் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், இதை ஐஎஸ் தீவிரவாதிகள் மறுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்குதலில், ஐஎஸ் தீவிரவாதிகள் தரப்பில் உயிரிழப்போ, காயமோ ஏதும் ஏற்படவில்லை என்று ஐஎஸ் தீவிரவாதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close