Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எடை குறைப்பு சிகிச்சையால் இமானுக்கு நேர்ந்த சோகம்!

உலகின் மிகவும் குண்டான பெண்மணிக்கு எடை குறைப்புக்காக நடந்த அறுவை சிகிச்சையால், இனிமேல் அவரால் நடக்கவே முடியாத நிலை உருவாகிவிட்டது.

fattest woman

 

எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் இமான் அஹமது. 500 கிலோ எடைகொண்ட  இமான், உடல் எடை குறைப்பு சிகிச்சைக்காக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின்னர், 500 கிலோவில் இருந்து 242 கிலோவாக எடை குறைந்துள்ளார்.

16 வயதிலேயே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட இமான், அதிக உடல் எடை காரணமாக, கடந்த 25 ஆண்டுகளாக படுக்கையிலேயே  வாழ்ந்துவருகிறார். அதிக உடல் எடையால், மேலும் பல சிரமங்களை அனுபவித்துவந்த இமானுக்கு, மும்பை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோதும் பக்கவாதம் ஏற்பட்டுள்ளது.

பல்வேறு விதமான மரபணுச் சோதனை சிகிச்சைகள்மூலம் உடல் எடை குறைக்கப்பட்டாலும், அதிக காலம் படுக்கையிலேயே இருந்ததாலும், காலில் பக்கவாதத்தால் ஏற்பட்ட நரம்புக் கோளாறாலும் இனிமேல் அவரால் எழுந்து நடக்கவே முடியாதென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

’தங்கள் பெண், இனிமேல் உலகின் அதிக எடையுள்ள பெண்மணி இல்லை’ என அவரது குடும்பத்தார் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அவரால் நடக்க முடியாவிட்டாலும், 25 வருடங்களுக்குப் பின்னர் இமானால் தற்போது நிமிர்ந்து உட்கார முடியும் என்பதே மகிழ்ச்சியளிப்பதாகப் பெற்றோர் கூறுகின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close