Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்க தாக்குதலில் 90 ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 90 ஐ.எஸ் தீவிரவாதிகள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகின் மிக சக்திவாய்ந்த வெடிகுண்டை கொண்டு அமெரிக்கா இத்தாக்குதலை நடத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நிகழ்த்தியது. வெடிகுண்டுகளின் தாய் என அழைக்கப்படும் GBU -43 குண்டை 2003-க்குப் பின்னர் அமெரிக்கா பயன்படுத்தியது. இதில் பல ஐ.எஸ் தீவிரவாதிகள் பலியாகியிருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதுவரை 36 தீவிரவாதிகள் இறந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது. ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தரப்பில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே அமெரிக்காவின் தாக்குதலில் ஐ.எஸ் வீரர்களுக்கு உயிரிழப்போ காயமோ ஏற்படவில்லை என ஐ.எஸ் அமைப்பின் தரப்பில் கூறப்பட்டிருந்தது. இத்தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.  
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close