Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டி.ஆர்.பாலு, பழனிமாணிக்கத்தால் பரபரத்த விவசாயிகள் போராட்டக்களம் - போராட்டம் திடீர் வாபஸ்

தஞ்சாவூரில் 19 நாள்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க வந்த தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, பழனிமாணிக்கம், எல்.கணேசன் உள்ளிட்டவர்களுக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வறட்சி நிவாரணம் வழங்குதல், வங்கியில் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் 30 நாள்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரிலும் 19 நாள்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் மணியரசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் காவிரியை மீட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஈரோடு, நாமக்கல், சிதம்பரம், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து இன்று ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.  

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, பழனிமாணிக்கம், எல்.கணேசன் உள்ளிட்ட ஏராளமானோர் போராட்ட களத்துக்கு வந்தனர். அப்போது, இன்று புதிதாக போராட்டத்துக்கு வந்திருந்த மாணவர்கள் குழு தி.மு.க உறுப்பினர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, தி.மு.க தான் மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி வழங்கியது என்றும் குற்றம் சாட்டினர். இதனால் மாணவர்களுக்கும் தி.மு.க தரப்பினருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு போராட்டக் குழுவினரும், காவல்துறையினரும் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

பின்னர் டி.ஆர்.பாலுவிடம் பேசிய போராட்டக்குழுவினர், 'நதி நீர் பங்கீடு தொடர்பாக பொதுவான ஒரு தீர்ப்பாயம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தி.மு.க போராட்டம் நடத்த வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை தி.மு.க வலியுறுத்த வேண்டும்' என்று கோரிக்கைவிடுத்தனர். 

அதன்பின்னர் போராட்டத்தை ஒருங்கிணைத்த பெ.மணியரசன், 'போராட்டம் தற்போது திரும்பப் பெறப்படுகிறது. மே 15-ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு ஐந்து மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும். தஞ்சை, திருவாரூர், திருச்சி, நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்' என்றும் தெரிவித்தார்.

செய்தி : கு.ராம கிருஷ்ணன்

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close