Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலகின் அதிக வயதான 117 வயது மூதாட்டி மரணம்

இத்தாலியைச் சேர்ந்தவர் எம்மா மொரானோ. கடந்த 1899 நவம்பர் 29ம் தேதி பிறந்தவர். தற்போது 117 வயதான இவர் நேற்று மரணம் அடைந்தார் இந்த மூதாட்டி 19, 20, 21 ஆகிய மூன்று நூற்றாண்டுகளில் தன் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். 

இத்தாலியில் உள்ள வெர்பேனியா நகரத்தில் வாழ்ந்து வந்த எம்மா. கடந்த 1936-ல் தன் கணவரை பிரிந்தார். ஒரு குழந்தை பிறந்து இறந்து போனது. சிறிய தொழிற்சாலை ஒன்றில்,  75 வயது வரை வேலை பார்த்து வந்தார். 90 வயதுக்கு பிறகு தினமும் 3 முட்டைகள் மட்டும்தான் எம்மா சாப்பிட்டு வந்தார். . பிஸ்கட்டுகளும் எடுத்துக் கொள்வார். கடந்த நவம்பர் 29ம் தேதி தனது 117வது பிறந்த நாளை எம்மா கொண்டாடினார். அவரது பிறந்த நாளுக்கு உலகம் முழுக்க இருந்து வாழ்த்துக்ள் குவிந்தன. 

இந்தநிலையில் வயது முதிர்வு காரணமாக எம்மா நேற்று மரணம் அடைந்தார். இவரைப் பற்றிய சுய சுயசரிதை 'The Woman Who Saw Three Centuries' என்ற பெயரில் விரைவில் புத்தகமாக வெளிவர உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த Gerontology Research Group (GRG) ஆய்வின்படி, தற்போது உலகின் வயதான மனிதர் ஜமைக்காவைச் சேர்ந்த வாய்லட் பிரவுன். இவர் கடந்த 1900ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி பிறந்தவர். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close