Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 100 பேர் பலி

சிரியாவின், அலெப்போவில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.


சிரியாவில், அரசுப்படைகள், நடத்திய ரசாயனத் தாக்குதலில் 80-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, அங்கு கடந்த வாரம் அமெரிக்கா ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அரசுப்படை கூறியுள்ளது.


இந்நிலையில், அங்கு அலெப்போவில், தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அலெப்போவில், பேருந்து பணிமனை ஒன்றில் கார் மூலம் வந்த தீவிரவாதிகள், இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பலி எண்ணிக்கை மேலும், அதிகரிக்கக் கூடும் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


குறிப்பாக, இந்தத் தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் பலரும் உயிரிழந்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close