Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிரியாவில் 68 குழந்தைகளைப் பலிவாங்கிய கார் வெடிகுண்டு!

சிரியாவில், பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டுத் தாக்குதலில், 68 குழந்தைகள் உட்பட 126 பேர் பலியாகியுள்ளனர்.

syria

சிரியாவின் பல்வேறு முக்கியப் பகுதிகளைப் பயங்கரவாதக் குழுக்கள் முற்றுகையிட்டுத் தாக்குதல் நடத்திவருகின்றன. இதனால், அங்கு கடும் பாதிப்புக்கு உள்ளான பொதுமக்கள் மீட்கப்பட்டும், வெளியேற்றப்பட்டும்வருகின்றனர். இந்த நிலையில், சிரியாவின் வடக்குப் பகுதிகளான ஃபுவா மற்றும் கஃப்ராயா நகரங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், பேருந்துகளின்மூலம் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர். 

மேற்கு அலெப்போ நகரின் ஒரு பகுதியில், இந்தப் பேருந்துகள் நிற்கவைக்கப்பட்டிருந்தன. அப்போது, வேகமாக வந்த கார் ஒன்று இந்தப் பேருந்துகளின் மீது மோதி, வெடிகுண்டை வெடிக்கச்செய்துள்ளனர். இதில், பேருந்துகள் வெடித்துச் சிதறின. பேருந்துக்குள் இருந்தவர்கள் மற்றும் அருகில் பாதுகாப்புக்கு இருந்தவர்கள் என மொத்தம் 126 பேர் இந்தத் தாக்குதலில் பலியானார்கள். இதில் 109 பேர், அச்சுறுத்தல் நகரங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு, பேருந்துகளில் அழைத்துவரப்பட்ட அப்பாவி பொதுமக்கள். அதில், பிஞ்சுக் குழந்தைகள் 68 பேர். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close