Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

துருக்கியில் மக்கள் வாக்கெடுப்பு: அதிபர் எர்டோகன் வெற்றி!

துருக்கி நாட்டின் அரசியல் சட்ட சாசனத்தில் முக்கியமான சில திருத்தங்கள் கொண்டுவருவதற்கான மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மக்கள் வாக்கெடுப்புமூலம், சட்ட சாசனத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டுமென்று, தற்போது ஆட்சியில் இருக்கும் அதிபர் தய்யிப் எர்டோகன் (Tayyip Erdogan) பிரசாரம் மேற்கொண்டார். இந்த அரசியல் சட்ட திருத்தம், அதிபருக்கு மேலும் அதிகாரங்களை வழங்குமென்றும், ஒற்றை சர்வாதிகாரத்துக்கு இட்டுச் செல்லும் என்றும் கூறி எதிர்க்கட்சியினர் பரப்புரை செய்தனர். ஆனால், இறுதியில் எர்டோகனுக்கே வெற்றி கிட்டியுள்ளது.

இந்த வெற்றியின்மூலம், துருக்கியின் சட்ட சாசனத்தில் கிட்டத்தட்ட 18 திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, தற்போது அந்த நாட்டில் நடைமுறையில் இருக்கும் பிரதமர் - அதிபர் என்ற 'இரு - தலைமையின் ஆட்சிமுறை' அகற்றப்பட்டு, அதிபருக்கு முழு அதிகாரம் கொடுக்கும் வண்ணம் சட்டத் திருத்தம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த வாக்கெடுப்புக்கு சாதகமாக மக்கள் வாக்களித்துள்ளதால், எர்டோகன் 2029-ம் ஆண்டு வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்த மக்கள் வாக்கெடுப்பு முறையில், சில விதிமீறல்கள் இருக்கிறதென்றும், அதை சட்டரீதியாக எதிர்கொள்ளப்போவதாகவும் துருக்கியின் எதிர்க்கட்சிகள் தெரிவித்திருக்கின்றன. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close