Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தோழியைத் தூக்கிக்கொண்டு மாரத்தானில் ஓடிய காலிழந்த ராணுவ வீரர். .. நெகிழ்ச்சி வீடியோ!

ஒரு காலை இழந்த ராணுவ வீரர், போஸ்டன் மாரத்தானில் ஒரு பெண்ணைத் தூக்கிகொண்டு இலக்கைக் கடந்த வீடியோ, இணையத்தில் வைரலாகிவருகிறது. 

 

 

அமெரிக்காவின் போஸ்டன் நகரில், மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இந்த மாரத்தானில், பென்சில்வேனியாவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்  கிரான்வி கலந்துகொண்டார். கிரான்வி 2008-ம் ஆண்டு நடந்த ஆஃப்கானிஸ்தான் குண்டு வெடிப்பில், ஒரு காலை இழந்தவர். 

போஸ்டன் மாரத்தானில் பங்குபெற்ற மாற்றுத் திறனாளிகள் அனைவரும் ஹேண்ட் பைக்கில் (Hand Bike) தூரத்தைக் கடந்தனர். ஆனால், ஒரு காலை இழந்த கிரான்வி, தன்னம்பிக்கையுடன் நடந்தே மாரத்தான் தூரத்தைக் கடந்தார். கிரானி இறுதிக்கோட்டை நெருங்கும்போது, தன் தோழி ஒருவரைத் தோளில் தூக்கிக்கொண்டு உற்சாகமாக இலக்கை அடைந்தார். அந்தக் காட்சி, அங்கிருந்த பார்வையாளர்களின் மனத்தை வெகுவாகக் கவர்ந்தது. பார்வையாளர்கள் அந்தக் காட்சியை வீடியோவாகப் பதிவுசெய்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். கிரான்வியின் வீடியோ, இணையத்தில் வைரலாகி நெட்டிசன்ஸை நெகிழ்ச்சியில் ஆழ்த்திவருகிறது!

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close