Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கைதான மூன்று மணி நேரத்தில் ஜாமீனில் வெளியேவந்தார் மல்லையா!

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து 9,000 கோடி ரூபாய்க்கு மேல் கடனாகப் பெற்று, திருப்பிச் செலுத்தவில்லை. பல்லாயிரக்கணக்கான கோடிகளைக் கடனாக வாங்கி, திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்குத் தப்பிய விஜய் மல்லையாவை கைதுசெய்து அழைத்துவரும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியிருந்தது இந்திய அரசு.

VijayaMallya

இதனிடையே, கடந்த 13-ம் தேதி, விஜய் மல்லையாவுக்கு பிணையில் வெளிவர முடியாத பிடி ஆணையை டெல்லி நீதிமன்றம் பிறப்பித்தது. அந்நியச் செலாவணி கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதாக, விஜய் மல்லையா மீது இந்தப் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது. 

இந்த நிலையில், விஜய் மல்லையாவைக் கைதுசெய்வது தொடர்பாக இங்கிலாந்திடம் உதவி கோரியிருந்தது இந்திய அரசு. வேண்டுகோளை ஏற்ற ஸ்காட்லாந்து யார்டு போலீஸார், அவரை இன்று கைதுசெய்தனர். இதையடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு, அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. கைதான மூன்று மணி நேரத்திலேயே, மல்லையா விடுதலை ஆகியுள்ளார்.

 

இதுகுறித்து விஜய் மல்லையா ட்விட்டரில்,  "இந்தியா கொண்டுவருவது குறித்து, நீதிமன்றத்தில் விசாரணை துவங்கியுள்ளது" எனக் கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close