Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அருணாச்சல பிரதேசத்தை, ‘தெற்கு திபெத்’ என அறிவித்தது, சீனா! இந்தியா கடும் கண்டனம்

அருணாச்சல பிரதேசத்தை இந்தியாவிடம் இருந்து அபகரிக்க முயற்சித்துவரும் சீனா, தற்போது அதற்காக செயல்படத் துவங்கியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஆறு இடங்களுக்கு, அதிகாரபூர்வமாக பெயர் அறிவித்துள்ளது சீனா.

சீனா

அருணாச்சல பிரதேசத்துக்கு தலாய் லாமா வருகை தந்ததை சீனா கடுமையாக எதிர்த்துவந்தது. அவரது வருகையை இந்தியா ஆதரித்தால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்றும் சீனா முன்னதாக எச்சரித்திருந்தது. தற்போது, தன்னுடைய முதல் நடவடிக்கையாக சீனா, அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஆறு இடங்களுக்குப் பெயர்களை அறிவித்துள்ளது.

அருணாச்சல பிரதேசத்துக்கு, ‘தெற்கு திபெத்’ எனப் பெயர் சூட்டியுள்ள சீனாவுக்கு, இந்தியா கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. ஆறு இடங்களுக்கு சீனப் பெயர்களை அறிவித்துள்ள சீனா , ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஒரு ஆக்கிரமிப்புப் பகுதிக்கும் சீனப் பெயரை அறிவித்துள்ளது.

சீனாவின் பிராந்திய இறையாண்மையையும், நன்மையையும் கருத்தில்கொண்டு, சீனாவின் ‘தெற்கு திபெத்’(இந்தியாவின் அருணாச்சல பிரதேசம்) பகுதிகளை மீட்போம் என அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது சீனா.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close