Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹிஜாப் அணிவதை நிறுத்தவா? மகளின் கேள்விக்கு தந்தை அளித்த நெகிழ்ச்சி பதில்!

இஸ்லாமிய சமூகத்தில் பெண்கள் ஹிஜாப் அணிவது வழக்கம். இம்மாதிரியாக ஹிஜாப் இனிமேல் அணியப்போவதில்லை எனக் கூறிய மகளுக்கு அவரின் தந்தை அளித்துள்ள பதில் இன்று பலரது வரவேற்பையும் பெற்றுள்ளது.

பெனிசில்வேனியாவைச் சேர்ந்த லாம்யா அல்ஷெரி திடீரென தன் தந்தையிடம் தான் ஹிஜாப் அணிவதை நிறுத்தப்போவதாக குறுந்தகவல் அனுப்பினார். தந்தை இதற்கு என்ன பதிலளிப்பார் என்ற கேள்வியுடனே குறுந்தகவல் அனுப்பினார் அல்ஷெரி. அதற்கு அவரது தந்தை அளித்த பதில் மகளை நெகிழச் செய்துள்ளது.

ஹிஜாப்

அல்ஷெரிக்கு அவரது நண்பர் ஒருவர், ‘ஹிஜாப் அணிவதை நிறுத்தினால் உனக்கு அவப்பெயர்’ ஏற்படும் என்றும் ‘உன் தந்தை உன்னை அடிப்பார்’ என்றும் கூறியுள்ளார். அந்த நண்பனுக்குப் பாடம் புகட்ட எண்ணினார் அல்ஷெரி. உடனடியாக தன் தந்தையிடம் தான் ஹிஜாப் அணியப்போவதில்லை எனத் தெரிவித்தார். அதற்கு அவரது தந்தை, ‘உனக்கு எது விருப்பமோ அதையே செய். நீ ஹிஜாப் அணியவேண்டும் என்று நான் மட்டும் இல்லை யாருமே அதுகுறித்து முடிவெடுக்கவில்லை. நீ ஹிஜாப் அணிய வேண்டுமா வேண்டாமா என்பது உன்னோட தனிப்பட்ட முடிவு’ என பதிலளித்துள்ளார்.

தன் நண்பன் மற்றும் தந்தை இருவரது குறுந்தகவல்களையும் ‘ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து ட்விட்டரில் பதிவேற்றியுள்ளார் அல்ஷெரி. அல்ஷெரியின் தந்தையின் பதிலுக்கு உலகம் முழுவதிலிருந்தும் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close