Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெனிசுலா போராட்டம்: இருவர் சுட்டுக் கொலை!

வெனிசுலா நாட்டில் ஆட்சியில் இருக்கும் அதிபர் நிக்கோலஸ் மதுராவுக்கு எதிராக, அந்த நாட்டைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்தப் போராட்டம்,'Mother of all marches' என்று அழைக்கப்படுகிறது. இதுவரை நடந்த தொடர் போராட்டங்களில் ஏழு பேர் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட இருவர் தற்போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம், உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவர், 17 வயது சிறுவர் எனவும் ஒரு பெண் என்றும் தெரியவந்துள்ளது.

தற்போது பதவியில் இருக்கும் அதிபர் நிக்கோலஸ் மதுராவைப் பதவி விலகக் கோரியும் புதிதாக அதிபர் தேர்தல் நடத்திடக் கோரியும் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 

இந்தத் தொடர் போராட்டம் குறித்து அதிபர் நிக்கோலஸ் மதுரா கூறும்போது, 'எதிர்க்கட்சியைச் சேர்ந்வர்கள் தொடர்ச்சியாக போலீஸை தாக்கியும் கடைகளைக் கொள்ளையடித்தும்வருகின்றனர். இதைப்போன்ற சம்பவத்தில் ஈடுப்பட்ட 30 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், வெனிசுலா அரசாங்கத்தின் ஆதரவாளர்கள், தற்போது நடக்கும் போராட்டங்களுக்கு எதிராக பேரணி நடத்த உள்ளனர்.' என்று கூறியுள்ளார்.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close