Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டைம் பத்திரிகையின் உலகின் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் பேடிஎம் நிறுவனர்

'டைம்' பத்திரிகை, உலகின் செல்வாக்கு மிகுந்த 100 நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியா சார்பில் பிரதமர் மோடி, பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில், இந்தியா சார்பில் இடம்பெற்றுள்ளவர்கள் இவர்கள் இருவர் மட்டுமே.

Vijay Shekhar


குறிப்பாக, இந்தப் பட்டியலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, சீன அதிபர் ஜின்பிங், வடகொரிய அதிபர் கிம், போப்  ஃப்ரான்சிஸ்  ஆகியோர் புதிதாக இடம் பெற்றுள்ளனர். முக்கியமாக, ட்ரம்ப்பின் மகள் இவான்கா ட்ரம்ப் மற்றும் இவான்காவின் கணவர் ஜரெட் குஷ்னர் ஆகியோரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.


இதில், அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது பேடிஎம் நிறுவனர் விஜய்சேகர்தான். இதுகுறித்து, டைம் பத்திரிகையில், பிரதமரின் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பின்,பேடிஎம் வளர்ச்சி எகிறியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு துவக்கத்தில், 122 மில்லியனாக இருந்த அதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, கடந்த ஆண்டு முடிவின்போது 177 மில்லியனாக உயர்ந்துள்ளது.


'டைம்' பத்திரிகை இதற்கு முன் வெளியிட்ட பட்டியலில்... ரகுராம் ராஜன், சானியா மிர்சா, பிரியங்கா சோப்ரா, சுந்தர் பிச்சை உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close