Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'அருணாச்சல பிரதேசத்தின் ஒவ்வொரு இன்ச்சும் இந்தியாவுக்குதான் சொந்தம்!'- சீனாவுக்கு இந்தியா பதிலடி

அருணாச்சல பிரதேசத்தை இந்தியாவிடம் இருந்து அபகரிக்க முயன்று வரும் சீனா, அங்கிருக்கும் 6 இடங்களுக்கு, அதிகாரப்பூர்வமாக பெயரை அறிவித்தது. இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, 'அருணாச்சல பிரதேசத்தின் ஒவ்வொரு இன்ச்சும் இந்தியாவுக்கு சொந்தமானது. அவர்கள் அதற்கு பெயர் மாற்றட்டும், அதனால் என்ன நடந்துவிடும்? பக்கத்து வீட்டுக்காரருக்கு பெயர் மாற்றுவது போலத்தான் இது இருக்கிறது. அப்படி பெயர் மாற்றுவதால், அவரது பெயர் மாறிவிடுவதில்லையே?' என்று கூறியுள்ளார்.

அருணாச்சல பிரதேசத்துக்கு தலாய் லாமா வருகை தந்ததை சீனா கடுமையாக எதிர்த்து வந்தது. அவரது வருகையை இந்தியா ஆதரித்தால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்றும் சீனா முன்னதாக எச்சரித்திருந்தது. இதையடுத்து, தன்னுடைய முதல் நடவடிக்கையாக சீனா, அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 6 இடங்களுக்குப் பெயர்களை அறிவித்தது. குற்றிப்பாக, அருணாச்சல பிரதேசத்துக்கு, ‘தெற்கு திபெத்’ எனப் பெயர் சூட்டியுள்ளது சீனா. 

இந்த விஷயம் குறித்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்ளே, 'அருணாச்சல பிரசேசம் இந்தியாவின் ஒரு பகுதி. அதற்கு பெயர் மாற்றுவதன் மூலமோ, புதிய பெயர் வைப்பதன் மூலமோ சட்டவிரோத ஆக்கிரமிப்பை சட்டப்பூர்வமாக மாற்ற முடியாது' என்று விவரித்தார்.

மேலும், சீனாவிடம் இந்த விஷயம் குறித்து விளக்கம் கேட்கப்பட்டதா என்ற கேள்விக்கு அவர், 'இதுவரை சீன அரசு அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை' என்று பதிலளித்தார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close