Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரான்ஸில் துப்பாக்கிச்சூடு- போலீஸ் அதிகாரி பலி!

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்தச் சம்பவத்தில், ஒரு போலீஸ் கொல்லப்பட்டிருக்கிறார் என்றும், இரண்டு போலீஸ் அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் கொல்லப்பட்டுள்ளதாக சமீபத்திய செய்திகள் கூறுகின்றன.

பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சகம், 'இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் உள்ள காரணம் என்னவென்று தற்போதைக்குக் கூற முடியாது' என்று தெரிவித்துள்ளது. மேலும், பாரீஸின் முக்கியப் பகுதிகளில் வெடிபொருள் ஏதாவது இருக்கிறதா என்று தேடுதல் நடந்து வருவதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close