Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரான்ஸ் துப்பாக்கிச்சூடு: ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பு

பிரான்ஸ் நாட்டில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். இத்தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

பாரிஸில் நேற்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் காவலர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். இதையடுத்து காவல்துறை நடத்திய பதில் தாக்குதலில் அந்த மர்ம நபர் கொல்லப்பட்டார். இத்தாக்குதலின் காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுவதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் கூறியது.

பிரான்ஸில் தேர்தல் நடைபெறவுள்ளதால், அந்நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளால் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பிரான்ஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து பிரான்ஸில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, பாரிஸ் தாக்குதலுக்கு ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close