Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தாலிபான் தாக்குதலில் 140 ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி!

ஆப்கானிஸ்தான் ராணுவம் மீது தாலிபான்கள் நடத்திய தீவிரவாதத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளதாக ஆப்கான் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

afghanistan attack

ஆப்கானிஸ்தான் ராணுவப் படையினர் மீது நடந்த தாக்குதலுக்கு தாலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்று உள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை ஆப்கானில் பாலக் மாகாணத்தில் நடந்த இத்தாக்குதலில் பல மணி நேரம் தொடர்ந்துள்ளது. இதில் 140 பேர் பலியாகியுள்ளனர் என்றும் 160 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் ஆப்கன் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் பாலக்மாகாணத்தில் உள்ள ஒரு மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது 10 பேர் கொண்ட தீவிரவாதக் குழு தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் ஒரு தீவிரவாதி மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இருவர் தங்களைத் தாங்களே தாக்குதல் முடிந்தவுடன் துப்பாக்கியால் சுட்டுக் தற்கொலை செய்துகொண்டனர். இருதரப்பினருக்கு இடையே நடந்த தாக்குதலில் ஏழு பேர் பலியாகினர்.

ஆப்கான் மீது நடத்திய தாக்குதலில் சுமார் 500 பேர் காயமடைந்து, பலியாகியுள்ளனர் எனத் தாலிபான் சார்பில் கூறப்பட்டுள்ளது. 

ராணுவம் மீது நடந்த இந்தக் கொடுமையான தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ’இத்தாக்குதலை இந்தியா கடுமையாகக் கண்டிக்கிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் எங்கள் அன்பையும், ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறோம்’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close