Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'மெக்ஸிகோ கண்டிப்பாக எல்லைச் சுவருக்கு பணம் கொடுக்கும்!' - ட்ரம்ப் திட்டவட்டம்

Donald trump

அமெரிக்காவில், அடுத்த வாரம் பட்ஜெட் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ள நிலையில், அந்த நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 'மெக்ஸிகோ - அமெரிக்கா இடையேயான எல்லைச் சுவருக்கு ஆகும் செலவை, நிச்சயமாக அந்த நாடே ஏற்கும்' என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து ட்ரம்ப் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், 'கண்டிப்பாக மெக்ஸிகோதான் எல்லைச்சுவருக்கு ஒரு வழியில்லை என்றால், இன்னொரு வழியில் பணம் கொடுக்க வேண்டும். இந்த எல்லைச்சுவர் என்பது அவசியத் தேவை.' என்று பதிவுசெய்துள்ளார்.

 அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்,  தனது தேர்தல் பிரசாரங்களின்போது, மெக்ஸிகோ - அமெரிக்கா இடையேயான எல்லைச்சுவர் கட்டுவதுபற்றித் தொடர்ந்து பேசிவந்தார். இந்தச் சுவர் எழுப்புவதற்கான காரணங்களாக ட்ரம்ப் கூறியது, மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக இடம் பெயர்தல், ஆயுதம் மற்றும் போதைப் பொருள் கடத்தல் போன்றவற்றைத் தடுப்பதற்கு என்று கூறினார். தேர்தலில் வெற்றிபெற்று பதவியேற்றவுடன், எல்லைச் சுவர் எழுப்புவதற்கான பல்வேறு நடவடிக்கைகளையும் ட்ரம்ப் எடுத்து வந்தார். குறிப்பாக, மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதிசெய்யும் பொருள்களுக்கு 20 சதவிகித வரி விதித்து, அதிலிருந்து வரும் பணத்தைவைத்து எல்லைச் சுவர் கட்டுவது உள்ளிட்ட பல வழிகளை முன்னெடுத்தார். ஆனால், இதற்கு மெக்ஸிகோ தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுக்காமல், இழுபறி கொடுத்துவருகிறது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close