Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவை சீன மீடியா கலாய்க்க இதுதான் காரணம்!

’விமானந்தாங்கி கப்பல்கள் நிறுவுவதை விடுத்து முதலில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள்’ என சீனப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

INS Vikramadhithya

‘சீனாவைக் கட்டுப்படுத்த விமானந்தாங்கிக் கப்பல்கள் நிறுவுவதை விடுத்து நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்க கவனம் செலுத்துங்கள்’ என சீனப் பத்திரிகையான ‘குளோபல் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. தொழில்மயமாக்கலில் வளர்ந்து வரும் இந்தியா விமானந்தாங்கிகள் நிறுவுவதில் பொறுமையுடன் செயல்படலாம் என்றும் அதற்கெல்லாம் பொருளாதார வளர்ச்சியையும் கணக்கில் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

விமானந்தாங்கிப் போர்க்கப்பல்கள் நாட்டின் பாதுகாப்பு அரண் ஆகும். உலகிலேயே பொருளாதார வளர்ச்சியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சீனா இப்பொழுதுதான் முதன்முதலாக ஒரு விமானந்தாங்கி கப்பலை உருவாக்கியுள்ளது. அதுவும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்தியாவுக்கு ஐஎன்எஸ் விக்ரமாதித்யா என்ற போர்க்கப்பல் உள்ளது. மேலும் இரண்டு போர்க்கப்பல்கள் தயாராகி வருகின்றன. இதில் ஒன்று முழுக்கமுழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் கப்பல் ஆகும்.

இதைத்தான் சீனப் பத்திரிகை, ’முதலில் பொருளாதார நிலையை மேம்படுத்தியப் பின் போர்க்கப்பல்கள், விமானந்தாங்கிகள் நிறுவுவதில் எல்லாம் கவனம் செலுத்தலாம்’ என இந்தியா விமானந்தாங்கிகள் உருவாக்குவது குறித்து கூறியுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close