Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனிநபர் வருமான வரி விகிதம்: ட்ரம்ப் அதிரடி முடிவு!

அமெரிக்காவில், பொதுமக்கள் செலுத்தும் வருமான வரி விகிதத்தை  தற்போதுள்ள 35 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதமாகக் குறைக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முடிவுசெய்துள்ளார்.

மேலும், சிறிய நிறுவனங்களின் பங்குதாரர்கள், உரிமையாளர்கள் செலுத்திவரும் 39.6 சதவிகிதம் என்ற வருமான வரியையும் 15 சதவிகிதம் வரை குறைக்க அவர் திட்டமிட்டுள்ளார் என்று வெள்ளைமாளிகை செய்தி தெரிவிக்கிறது.

trump

வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் கார்ப்பரேட் லாபம் மற்றும் வர்த்தகத்துக்கான வட்டி விகிதங்களைக் குறைப்பது என்று ட்ரம்ப் முடிவு செய்திருப்பதாகவும் அந்தச் செய்தி மேலும் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்று சனிக்கிழமையுடன் 100 நாள்கள் நிறைவடைய உள்ள நிலையில், பொதுமக்களுக்கு இந்த வரிச் சலுகை அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். என்றாலும், அமெரிக்க செனட் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள், இந்த வட்டி விகிதக் குறைப்பு நாட்டின் வருவாயைக் குறைத்துவிடும், மிகப்பெரிய அளவிலான இழப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர்.

எனினும், இந்த முக்கிய முடிவு தொடர்பாக தீவிர பரிசீலனைசெய்யப்பட்டு, விரைவில் மசோதா தயாரிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close