Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சனிக்கிரகத்தை ஆராயும் காசினி விண்கலம்! அழியும் முன்னர் நிகழ்த்தும் சாதனைகள்!

சனிக்கிரகத்தை ஆராயும் முதல் விண்கலமான ‘காசினி’ நாசாவின் படைப்பாகும். தன்னுடைய அழிவின் தருவாயிலும் மனித அறிவியல் உலகுக்கு பல விஞ்ஞான உண்மைகளை வெளிப்படுத்த உள்ளது.

காசினி

22 ஆரங்களைக் கொண்ட சனிக்கிரகத்தினை ஆராய முதன்முதலாக அனுப்பப்பட்ட விண்கலம் ‘காசினி’. நாசாவால் அனுப்பப்பட்ட இந்த விண்கலம் நேற்று வெற்றிகரமாக சனிக்கிரகத்தின் சுற்றுப்பாதையில் இறங்கிய முதல் விண்கலம் ஆகும். வரும் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி சனிக்கிரகத்தின் மேற்பரப்பில் மோதி சிதறவிருக்கும் ‘காசினி’ விண்கலம் சர்வதேச அறிவியல் முன்னேற்றத்துக்கு வழிவகுத்தப் பின்னரே மறைகிறது.

சனிக்கிரகத்தின் நிலவான ‘டைட்டன்’-ஐ புகைப்படம் எடுத்து அனுப்பிய காசினி, அக்கிரகத்தின் அமைப்பினை ஆராய்ந்து வரும் இந்தக்கலம் டைட்டன் நிலவினையும் ஆராய்ந்து வருகிறது. சனிக்கிரகம் குறித்த பல புரிதல்களை ஏற்படுத்தியுள்ள காசினி விஞ்ஞானிகளின் அறிவியல் பார்வைக்கு மாற்று சிந்தனையை அளித்துள்ளது. நாசா மட்டுமல்லாது சர்வதேச விஞ்ஞானிகளும் காசினியை மகத்தான சாதனையாகவே கருதுகின்றனர்.

பன்னிரெண்டு ஆண்டு காலமாக சனிக்கிரகம் குறித்து நாசா நடத்தி வந்த ஆராய்ச்சியை முடிவுக்கு வரவிருக்கிறது. கூடிய விரைவில் கிரகத்தின் மேல்பரப்பில் காசினி சிதறி செயல் இழக்கவுள்ளது. சனிக்கிரகத்தின் வட்டப்பாதை, வளிமண்டலம், வேற்றுக் கிரகம் ஒன்று மோதியதால் உருவான நிலவு என அறிவியல் ஆச்சர்யங்களை உலகுக்கு வெளிப்படுத்திய பின்னரே காசினி தன் ஆயுட்காலத்தை நிறைவு செய்யவுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close