Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு நாள் மெக்கானிக் ஆன ஃபேஸ்புக் ஓனர்

 

ஃபேஸ்புக் சிஇஓ மார்க் சக்கர்பெர்க் இந்த வருடத்தின் நியூ இயர் ரெசல்யூஷனாக இயர் ஆஃப் ட்ராவல் என்ற பெயரில் அமெரிக்க மாகாணங்களைச் சுற்றி வருகிறார். அதன் ஒரு பகுதியாக மிச்சிகன் சென்ற அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் '' இது மிச்சிகனுக்கு என்னுடைய முதல் பயணம். இங்குள்ள ஃபோர்டு தொழிற்சாலையை பார்வையிட்டேன். இதில் ஒரு மிகச்சிறிய அசெம்ப்ளி லைனில் பணிபுரிந்து பார்த்தேன். இன்னும் சொல்லப் போனால் அங்குள்ள ஒரு தயாரிப்பில் மேற்பார்வையாளராக கையொப்பமிட்டேன். இவர்களோடு பணிபுரிந்தது மகிழ்ச்சியான தருணமாக இருந்தது.

 

 

உண்மையில் அசெம்ப்ளி லைனில் பணிபுரிவது கடினமான விஷயம் தான். சில வேலைகளைச் செய்யும்போது அதில் நாம் நிபுணத்துவம் பெறுவோம் அதனை இங்கு என்னால் உணர முடிகிறது. இந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தித் தந்த பில் ஃபோர்டுக்கும், என்னோடு பணிபுரிந்தவர்களுக்கும் நன்றி” என குறிப்பிட்டிருக்கிறார்  மார்க். ஒருநாள் மெக்கானிக்காக மார்க் பணிபுரிந்ததற்கு மார்க்குக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள் நெட்டிசன்ஸ்.

Mark Zuckerberg

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close