Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'அதிபர் பணி எளிமை என நினைத்து விட்டேன்' - ட்ரம்ப்

அதிபர் ஆவதற்கு முன்னர் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து ஏங்குவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

trump

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரம்ப் 100 நாள்கள் தனது பணியை நிறைவு செய்துவிட்டார்.  இந்த நூறு நாட்களில் சிரியா மீது வான்வழி தாக்குதல், ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல், வட கொரியாவுடன் கடும் மோதல் என அதிரடிகளுக்கு பஞ்சம் வைக்க அவர் தவறவில்லை. இதனிடையே தனது 100 நாள்கள் பணி குறித்து அவர் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,' எனது முந்தைய வேலையைவிட அமெரிக்காவின் அதிபராக இருப்பது சற்று சவாலாக உள்ளது. இது எளிமையான வேலை என நான் நினைத்து விட்டேன்' எனக் கூறியுள்ளார். மேலும் இதற்கு முன்னர் வாழ்ந்து வந்த வாழ்க்கையை நினைத்து ஏங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர் ட்ரம்ப் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close