Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலக நாடுகளுக்கு போப் ப்ரான்சிஸ் வேண்டுகோள்

அமெரிக்கா மற்றும் வட கொரியா நாடுகளுக்கு இடையே மூன்றாவது நாடுகள் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று போப் ப்ரான்சிஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். 


அமெரிக்கா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வட கொரியா அணு ஆயுத சோதனை மேற்கொள்வதை அமெரிக்கா விரும்பவில்லை. அதனால் வட கொரியா அணு ஆயுத சோதனை மேற்கொள்வதை தடுக்க அமெரிக்கா பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகிறது. இருப்பினும் வட கொரியா, அமெரிக்காவின் எதிர்ப்புக்கு அஞ்சாமல் செயல்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் அமெரிக்கா தனது கடற்படையை கொரிய தீபகற்ப பகுதியில் கொண்டு நிறுத்தியது. இந்த செயல் வட கொரியாவிற்கு ஆத்திரத்தை மூட்டியது.

அணு ஆயுத போருக்கு தயாராக உள்ளதாக வட கொரியா அறிவித்தது. இந்த இரு நாடுகளின் செயல்களால் அந்தப் பிராந்தியத்தில் பெரிய அளவிலான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் போர் சூழல் உருவாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்பிரச்னை குறித்து போப் ப்ரான்சிஸ் கருத்து தெரிவித்துள்ளார். அவர், 'ஏதாவது ஒரு மூன்றாம் நாடுகள் இரு நாடுகளிடமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இந்தப் பிரச்னையை பேசி தீர்ப்பதற்காக வெவ்வெறு பகுதிகளில் உள்ள தலைவர்களை அழைக்கிறேன். அமெரிக்கா மற்றும் வட கொரியாவிற்கு இடையேயான பதற்றமான சூழல் பேரழிவிற்கான போர் உருவாகும் அபாயத்தைக் கொண்டது' என்று தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close