Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரபல மலையேற்ற வீரர் யூலி ஸ்டெக், விபத்தில் மரணம்!

 

ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல மலையேற்ற வீரர் யூலி ஸ்டெக், விபத்து ஒன்றில் காலமானார்.

 

Uelisteck

 


இந்தத் தலைமுறையின் மிகச்சிறந்த மலையேற்ற வீரர் என்று அனைவராலும் பாராட்டப்படுபவர் யூலி ஸ்டெக். மலையேறுதலுக்காக பல்வேறு விருதுகளைக் குவித்தவர் யூலி. கடந்த 2000-ம் ஆண்டு முதலக, மலையேறுதலில் பல்வேறு சாதனைகளை படைத்து வந்தவர்;  குறிப்பாக, 2012-ஆம் ஆண்டில் , ஆக்ஸிஜன் இல்லாமல் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை எட்டினார் யலி! பின் கடந்த 2015-ம் ஆண்டு வெறும், 62 நாட்களிலேயே மொத்தம் 13,100 அடி கொண்ட 82  சிகரங்களின் உச்சியை எட்டி சாதனை புரிந்தார்.


இந்நிலையில், அவர் எவரெஸ்ட் சிகரத்தை, புதிய வழியில் எட்ட முயன்றார். இந்த முயற்சியில்  விபத்து ஏற்பட்டு, அவர் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 40. அவரது உடல் இமயமலையில் இருந்து கண்டெடுக்கப்பட்டு, நேபாளம் தலைநகர் காத்மண்டு விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.  இதையடுத்து, அங்கிருந்து அவரது உடல் ஸ்விஸ் நாட்டுக்குக் கொண்டு செல்லப்பட உள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close