Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஜனநாயகக் கட்சி இணையதளத்தை சீனா ஹேக் செய்திருக்கலாம்' : ட்ரம்ப் பகீர் கருத்து

கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக் கட்சி வேட்பாளர் ஹிலரி கிளின்டன் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்ப் வெற்றி பெற்று, அமெரிக்க அதிபராகியுள்ளார். குறிப்பாக, அமெரிக்க அதிபர் தேர்தல் நேரத்தில் ஜனநாயகக் கட்சியின் இணையதளம் மற்றும் ஹிலரியின் இ-மெயில் ஹேக் செய்யப்பட்டு,  பல தகவல்கள் வெளியிடப்பட்டன.

Trump


இந்தத் தகவல்கள் வெளியானதால் தான் தோல்வியடைந்ததாக, ஹிலரி குற்றம் சாட்டி வந்தார். முக்கியமாக, இந்த ஹேக்கிங் விவகாரத்தில் ரஷ்யா ஈடுபட்டு வந்ததாக குற்றம் சாட்டுப்பட்டு வந்தது. "ரஷ்யா மற்றும் அமெரிக்க புலனாய்வுத் துறை இயக்குநர் ஜேம்ஸ் கோமி ஆகியோர்தான் எனது தோல்விக்கு காரணம்" என்று ஹிலரி குற்றம் சாட்டினார்.


இந்நிலையில், ட்ரம்ப் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்து பேட்டியளித்துள்ளார். அதில் அவர், "ஹேக்கிங்கில் யார் ஈடுபட்டுள்ளார்கள் என்று குறிப்பிட்டு கூற முடியாது. சீனா கூட இந்த ஹேக்கிங் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் அல்லது வேறு சிலர் ஈடுபட்டிருக்கலாம்" என்று கூறியுள்ளார்.


ட்ரம்பின் இந்த கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close