Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாணவர்களின் மதிப்பெண்ணை அதிகரிக்கச் செய்வது எது?

இன்றைய தலைமுறையினரால் தவிர்க்க முடியாததாகவும், பிரிக்க முடியாததாகவும் மாறிவிட்டது ஃபேஸ்புக். ஒவ்வொரு நாளும் `என்ன கமென்ட் போடுவது?' என்பதிலிருந்து `என்னென்ன விஷயங்களை ஷேர்செய்வது?' என்பது வரை ரூம் போட்டு யோசித்துக்கொண்டிருக்கிறது இளைய தலைமுறை. இவர்களின் சோஷியல் மீடியா அலம்பல்களையும் அக்கறைகளையும் பல்வேறு கோணங்களில் அலசிவருகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 

ஃபேஸ்புக்

தற்போது பாலர் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் முதல் திண்ணைப் பெருசுகள் வரை சமூக வலைதளங்களையே அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதில் கல்லூரி இளைஞர்கள் ஃபேஸ்புக்கில் படம் பார்ப்பது முதல் பாடம் படிப்பது வரையிலான அனைத்துத் தேவைகளுக்கும் ஃபேஸ்புக்கையே நாடுகிறார்கள். தேர்வு அறைக்குச் செல்லும்போதுகூட `நான் பரீட்சை எழுதப்போகிறேன்' என்று போகிறப்போக்கில் ஸ்டேட்டஸ்ஸைத் தட்டிவிட்டுத்தான் செல்கிறார்கள். `இவ்வாறு தட்டிவிடும் ஸ்டேட்டஸ்களுக்கு விழும் லைக்ஸ், தேர்வு பயத்தைக் குறைத்து, நம்பிக்கையை அதிகரித்து அதிக மதிப்பெண்களைப்பெற உதவி புரிகிறது' எனக் கண்டறிந்திருக்கிறார்கள் அமெரிக்காவில் உள்ள இல்லியன்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். 

`ஃபேஸ்புக் பயன்படுத்துவதால் கவனக்குறைவு ஏற்பட்டு, படிப்பில் ஆர்வம் காட்டுவதில்லை' என்ற குற்றச்சாட்டுகள் நிறைந்திருக்கும் வேளையில், இவர்களின் ஆய்வு கவனத்தை ஈர்க்கிறது. இந்த ஆய்வில் 'சமூக வலைதளங்களில் மாணவர்கள் படிப்பு சார்ந்த விஷயங்களையும் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். இது அவர்களின் திறனை மேம்படுத்துவதற்கு உதவுகிறது' என்று கண்டறிந்திருக்கிறார்கள். 

இவர்களுடைய ஆராய்ச்சியில் 'டெக்னாலஜி வளர்ந்துள்ள நிலையில், இன்னமும் தேர்வு என்றால் உணர்வுபூர்வமாகவும் உளவியல் ரீதியாகவும் பயப்படுகிறார்கள். தேர்வில் மாணவர்களைப் பாடாய்ப்படுத்தும் விஷயங்களாக இருப்பவை, மறதியும் பதில் தெரியாத கேள்விகளும்தான். பரீட்சைக்குப் பயப்படுகிறவர்கள், பெரும்பாலும் தன்னம்பிக்கைக் குறைந்தவர்களாகவும், தேவையில்லாத எண்ணங்கள் கொண்டவர்களாகவும்தான் இருப்பார்கள். இவர்களுக்கு ஃபேஸ்புக் லைக்ஸ் ஒரு பூஸ்ட்டாக அமைகிறது' என்று சொல்லப்பட்டுள்ளது. 

ஃபேஸ்புக்'நான் இன்று தேர்வு எழுதப்போகிறேன்', 'எனக்கு நாளைக்குத் தேர்வு இருக்கிறது', 'பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருக்கிறேன்'. 'நாளைக்கு எக்ஸாம், என்ன செய்யப்போகிறேன் என்று தெரியவில்லையே', இன்னும் இரண்டு சேப்டர்கள்தான் இருக்கு', நாளையோடு எனக்குப் பிடித்த கணக்கு பிணக்கு முடியப்போகிறது' என்று யாராவது கமென்ட் போட்டிருந்தால், உடனே லைக் போடுங்கள்... புண்ணியமாகப்போகும். 

கலிப்ஃபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 'அதிக அளவில் ஃபேஸ்புக் இணைப்பில் இருப்பவர்கள் தங்களுடைய வாழ்க்கையின் வயதைக் கூட்டிக்கொள்வதாக' கண்டறிந்திருக்கிறார்கள். ஆக, யாராவது உங்களுக்கு 'Friend Request' கொடுத்திருந்தால், 'Add Friend' க்ளிக் செய்து, அவர்களின் வாழ்நாளை நீட்டிக்கச் செய்யுங்கள். 

இன்னோரு ஆராய்ச்சியில் `ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்களுக்கு அடுத்தடுத்து விழும் கமென்ட்களும் லைக்குகளும் இளைஞர்களைத் தேடவைக்கின்றன. இந்தத் தேடல் மூலம் வாழ்க்கையின் சுவாரஸ்யமும் திருப்தியும் கூடுகின்றன' என்று கண்டறிந்திருக்கிறார்கள்.  ஃபேஸ்புக்கில் விழும் லைக்குகள், தனிமைப்படுத்தும் தன்மையைக் குறைப்பதாகவும், சமூக பலம் கூடுவதாகவும் இளைஞர்கள் உணர்கிறார்கள் எனக் கண்டறிந்திருக்கிறார்கள்' எனக் கூறப்பட்டுள்ளது. 

உடனே உங்கள் FB பக்கத்துக்குச் சென்று ஸ்டேட்டஸையும் லைக்ஸையும் போடுங்கள்! 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close