Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்கர்களை வேலைக்கு எடுக்கும் இன்ஃபோஸிஸ்... வரவேற்கும் ட்ரம்ப் நிர்வாகம்!

donald trump

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தருவேன் என்று 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது வாக்குறுதி அளித்தார். அதை நிறைவேற்றும் வகையில் அயல்நாட்டவர்களை பணியமர்த்தும்போது வழங்கப்படும் எச்-1பி விசாவுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோது, அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் இந்திய ஐ.டி ஊழியர்களுக்கு சிக்கல் எழும் என்று பரவலாக பேசப்பட்டது. 

இதையடுத்து எச்-1பி விசா புதிய அறிவிப்பின் எதிரொலியாக, பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இன்ஃபோஸிஸ் நிறுவனம், அமெரிக்காவில் புதிதாக நான்கு கிளைகளைத் திறக்கப் போவதாகவும், 10,000 அமெரிக்கர்களை அதற்காக வேலைக்கு எடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து ட்ரம்ப் அரசாங்கம், 'இன்ஃபோஸிஸ் போன்ற நிறுவனங்கள் அமெரிக்காவில் பொருளாதார  வாய்ப்பு இருப்பதை கண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், ட்ரம்ப் அரசின் வளர்ச்சி சார்ந்த அஜெண்டாவால் தான் இது நிகழ்ந்திருக்கிறது' என்று தெரிவித்துள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close