Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாட்ஸ்அப் வந்த கதை தெரியுமா ?

இன்று அதிகாலை முதல், வாட்ஸ்அப் சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது. வாட்ஸ்அப்-பை இத்தனை நாளாய் நம்முடைய விருப்பம் போல பயன்படுத்திவந்தோம். வாட்ஸ்அப் இல்லாமல் இருக்கும் இந்த கொஞ்ச நேரத்திலாவது, வாட்ஸ்அப்-பின் அருமை பெருமையைப் பற்றிப் பேசலாமே...

Whatsapp

சராசரியாக, மாதம் ஒன்றுக்கு 450 மில்லியன் பேர் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. மேலும், வாட்ஸ்அப் சேவையைத் தினமும் 15 லட்சம் பேர் புதிதாகப் பெறுவதற்கு வரிசையில் நிற்கிறார்கள். செல்போனில் இருந்து மெசேஜ், வீடியோ, புகைப்படங்களைக் கட்டணமே இல்லாமல் (நெட் இருக்கணும் மக்களே!) கும்ப்லிங், கும்ப்லிங் ஆக அனுப்பும் வசதி, வாட்ஸ்அப்-பில் உண்டு என்பதால், வாட்ஸ்அப்-பின் பெருமை எங்கேயோ பறந்தது. நேற்றுவந்த தம்பியான 'வாட்ஸ்அப்' பின் வேகமான வளர்ச்சியைப் பார்த்த அண்ணன் பேஸ்புக், தம்பி 'வாட்ஸ்அப்'பை தனக்குச் சொந்தமாக்கிக்கொண்டால்தான், நம் வியாபாரம் ஓடும் என்று, தம்பிக்கு ஒரு விலை வைத்தார்...

தம்பியும் சம்மதிக்க, 99,584 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டது வாட்ஸ்அப். உக்ரைனிலிருந்து கையில் ஒன்றுமே இல்லாமல் பிழைப்பு தேடி அமெரிக்காவுக்கு வந்த இளைஞனின் பெயர், ஜான் கோம். நண்பன் பிரையன் ஆக்டனுடன் இணைந்து ஜான்கோம் உருவாக்கியதுதான் வாட்ஸ்ஆப். பிழைக்க வழி தேடிவந்த ஜான்கோமின் கடின உழைப்பில் உருவான வாட்ஸ்அப்தான், இன்று பலரின் வேலையை எளிதாக்கி வைத்திருக்கிறது.

-ந.பா.சேதுராமன்

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close