Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மும்பை-கராச்சி இடையேயான விமான சேவையை நிறுத்துகிறது பாகிஸ்தான் ஏர்லைன்ஸ்!

மும்பை- கராச்சி இடையேயான விமான போக்குவரத்து சேவையை நிறுத்துவதாக பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.


பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒவ்வொரு வியாழக்கிழமையும், பாகிஸ்தானின் கராச்சி நகருக்கும் மும்பைக்கும் இடையேயான விமான சேவையை மேற்கொண்டு வந்தது. இச்சேவை மே 11-ம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது என பாகிஸ்தான் நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் பயணிகள் யாரும் முன்பதிவு செய்ய வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

பாகிஸ்தான் ஏர்லைனஸ்


இந்நிலையில் வியாழக்கிழமையான நேற்று கராச்சி- மும்பை இடையே விமான சேவை நடைபெறவில்லை. பாகிஸ்தான் இந்தியா இடையே அரசியல் உறவு சரியில்லாதது தற்போதைய நிலை என்றாலும் இச்சேவை நிறுத்தத்துக்கான காரணத்தை பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் தெரிவிக்கவில்லை. ஆனால், சில வணிக ரீதியான காரணங்களுக்காக நிறுத்தப்பட்டு இருக்கலாம் என பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close