Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜனாதிபதியாக டிரம்ப்பின் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தன்னுடைய முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக சவுதி அரேபியா, இஸ்ரேல் மற்றும் வாடிகன் நகரத்துக்கு செல்லவிருக்கிறார்.

டொனால்டு டிரம்ப்

 

நேட்டோ மற்றும் ஜி-7 மாநாட்டுக்காக பெல்ஜியம் மற்றும் இத்தாலி நாட்டு நகரங்களுக்குப் பயணமாகும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தன்னுடைய பயண திட்டத்தில், மேலும் மூன்று இடங்களை இணைத்துள்ளார். ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் டிரம்ப் மேற்கொள்ளவிருக்கும் முதல் வெளிநாட்டு பயணமாக இது அமையும். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை நேற்று டிரம்ப் வெளியிட்டார்.

மத்திய கிழக்கு நாடுகள் உடனான நல்லுறவினை வளர்க்க இப்பயணங்கள் உதவும் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடைய முதல் பயணம் என்பதால் புனிதமான, வரலாற்று பூமியான சவுதி அரேபியாவில் இருந்து துவங்கவுள்ளதாகக் கூறும் டிரம்ப், அங்கிருந்து தான் இஸ்லாமியர்கள் உடனான உறவையும், ஆதரவையும் வருங்காலத்தில் வளர்த்துக்கொள்ள முடியும்’ என்கிறார்.

இறுதிக்கட்டமாக ரோம் நகரின் வாடிகனில் போப் ஃப்ரான்சிஸ் அவர்களை மே 24-ம் தேதி சந்தித்த பின்னர் ஜி7 மாநாட்டில் பங்கேற்க செல்வார் என அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close