Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

86 வயது எவரெஸ்ட் சாதனையாளர் : இரண்டாம் சாதனை முயற்சியில் மரணம்!

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய மிகவும் வயதான மனிதராகக் கருதப்படும் மின் பஹதூர் ஷேர்சன்  நேற்று தனது இரண்டாம் கட்ட சாதனை பயணத்தின் போது மரணமடைந்தார்.

எவரெஸ்ட் சாதனையாளர்


நேபாள நாட்டில் உள்ள காத்மண்டுவைச் சேர்ந்த மலையேற்ற வீரர் மின் பஹதூர் ஷேர்சன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய மிகவும் வயதான நபர் ஆவார். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதை பல நாள் லட்சியமாகக் கொண்டு இளைஞர்கள் பலரும் இன்னும் முயற்சித்து வரும் நிலையில் 2008-ம் ஆண்டு தன்னுடைய 76 வது வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறி கின்னஸ் சாதனை புரிந்தார். 


2013-ம் ஆண்டு ஜப்பானைச் சேர்ந்த மியூரா என்பவர் தன்னுடைய 80-வது வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறிய வயதானவர் என்ற சாதனையை புரிந்தார். இதனை முறியடிக்கவே இரண்டாம் கட்ட சாதனைக்காக நேற்று எவரெஸ்ட் ஏற முயற்சித்துள்ளார் மின் பஹதூர் ஷேர்சன். அச்சமயம் சிகரம் ஏறுவதற்கு முன்னரே கீழ் முகாமில் திடீர் மாரடைப்பால் மின் பஹதூர் மரணமடைந்தார். இத்தகவலினை நேபாள சுற்றுலாத்துறை இயக்குநர் தினேஷ் பட்டாராய் உறுதிசெய்து வெளியிட்டுள்ளார்.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close