Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரான்ஸ் அதிபர் தேர்தல்: இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

பிரான்ஸ் நாட்டின் 25-வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் அதிபர் தேர்தல்

பிரான்ஸ் நாட்டின் 24-வது அதிபர் பிரான்கொய்ஸ் ஹோலண்டேவின் பதிவிக்காலம் நிறைவடைவதையொட்டி புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்றது. இந்த முதல்கட்ட வாக்குப்பதிவில் என் மார்சே அணியின் இமானுவேல் மேக்ரன் முன்னிலையில் இருந்தார். இரண்டாம் இடத்தில் தேசிய முன்னணிக் கட்சியின் மெரைன் லி பென் இருந்தார். முதல்கட்டத் தேர்தலில் 97% வாக்குகள் பதிவாகியதில் இமானுவேல் 23.9%, லி பென் 21.4% பெற்றிருந்தனர்.

அடுத்தபடியாக இன்று அதிபர் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் குறைந்த அளவிலான வாக்குகளே பதிவாகியுள்ளன. இதன் முடிவுகளைப் பொறுத்தே அடுத்த அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார். பிரான்ஸ் அதிபர் தேர்தல் முடிவுகள் ஐரோப்பிய யூனியனில் எதிரொலிக்கும் என்பதால் இத்தேர்தல் முடிவுகள் உலக நாடுகளால் கூர்ந்து கவனிக்கப்படுகிரது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close