Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓடும் விமானத்தில் குட்டித்தூக்கம் போட்ட விமானி!

பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் பைலட் ஒருவர் ஓடும் விமானத்தில் 305 பயணிகளின் உயிரைப் பணயம் வைத்துவிட்டு பயணிகள் இருக்கையில் வந்து தூங்கியுள்ளார்.

உறங்கிய விமானி

படம்: dawn.com

இஸ்லாமாபாத்தில் இருந்து லண்டன் சென்ற பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானத்தின் பைலட் அமீர் அக்தர் ஹாஷ்மி, 305 பயணிகளை வைத்துக்கொண்டு விமானத்தில் உறங்கியுள்ளார். விமானத்தை பயிற்சி விமானியிடம் ஒப்படைத்துவிட்டு இந்த மூத்த விமானி பிஸினஸ் வகுப்பில் வந்து சுமார் இரண்டரை மணி நேரம் தூங்கியுள்ளார்.

விமானத்தின் மூத்த விமானியின் இந்த 'சாகசத்தை' அதே விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் ஃபோட்டோ எடுத்து, மற்ற பயணிகளிடமும் அதைப் பகிர சமூக வலைதளங்களில் அதிவேகமாகப் பரவியது அந்தப் புகைப்படம். விமானத்தின் மற்றொரு ஊழியரின் மூலம் இக்காட்சியினை புகாராகப் பயணிகள் பதிவு செய்தனர். முதலில் இச்சம்பவத்தை பெரிதாகக் கண்டுகொள்ளாத விமான நிறுவனம், பல இடங்களில் இருந்தும் அழுத்தம் வந்ததன் காரணமாக தற்போது அந்த விமானியின் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

விமானத்தின் மூத்த விமானியான ஹாஷ்மிக்கு புதிய விமானிகளுக்குப் பயிற்சியளிப்பதற்காகவே 1 லட்ச ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால், அவர் தன் கடமையைச் செய்யாமல் உறங்கியது கண்டனத்துக்குரியது என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close