Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரான்சின் புதிய அதிபர் இம்மானுவேல் மேக்ரான்!?

Emmanuel Macron

பிரான்சு நாட்டின் புதிய அதிபருக்கான தேர்தல் அந்நாட்டில் நடந்து வருகிறது. இந்தத் தேர்தலில் 'என் மார்ஷல்' (En Marchel) கட்சியைச் சேர்ந்த இம்மானுவேல் மேக்ரான் மற்றும் மரீன் லீ பென் என்ற வலதுசாரி கட்சியைச் சேர்ந்தவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில், இன்று பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கியது. இதையடுத்து, மேக்ரானுக்கு  65 சதிவிகித பதிவான வாக்குகளும், மரீனுக்கு 35 சதவிகித வ்வாக்குகளும் பதிவாகி இருக்கும் என தகவல்கள் வரத் தொடங்கியுள்ளன.
மேக்ரானின் வெற்றியை உறுதிபடுத்தும் வகையில், பிரான்சு பிரதமர் பெர்னார்டு காசினூவ், 'வலதுசாரிகளை மக்கள் நிராகரித்துள்ளனர் என்பது இந்த தேர்தல் முடிவு பற்றி வரும் செய்தியிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது' என்று கூறியிருக்கிறார்.

மேலும், இரண்டாம் இடம் பிடித்துள்ளதாக கூறப்படும் மரீனும், 'இம்மானுவேல் மேக்ரானை போனில் அழைத்து வாழ்த்து சொன்னேன்' என்று கூறியுள்ளார்.

இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும், உலகின் முன்னணி பத்திரிகைகள் இம்மானுவேல் மேக்ரான்தான் பிரான்சின் அடுத்த அதிபராக அரியணையில் ஏறுவார் என்று தெரிவிக்கின்றன.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close