Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இங்கிலாந்து பணக்காரர்கள் பட்டியல்: டாப்பில் வந்த இந்தியர்கள்...!

Hinduja brothers

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தில், 'ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்துப் பிரிந்து தனியாக செல்ல வேண்டும்' என்ற குரல் பலமாக ஒலித்தபோது, 'வியாபாரம் மந்தமாகும், புது நிறுவனங்கள் வராது, முன்னர் செய்திருந்த புரிந்துணர்வு ஒப்பந்தகளில் பாதிப்பு ஏற்படும்' என்று பல காரணங்கள் அடுக்கப்பட்டன. ஆனாலும், இங்கிலாந்து என்றழைக்கப்படும் யு.கே, இந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்தது. 

இந்நிலையில், 'தி சண்டே டைம்ஸ் ரிச் லிஸ்ட்' என்ற  இங்கிலாந்து பில்லியனர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் இடம்பெற்றுள்ள 134 பில்லியனர்கள் பட்டியலில், லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் 'ஹிந்துஜா' இந்திய நிறுவனத்தின் ஹிந்துஜா பிரதர்ஸ், முதல் இடத்தில் உள்ளனர். இந்தப் பட்டியல்படி, அவர்களின் மொத்த சொத்த மதிப்பு, 16.2 பில்லியன் பவுண்டுகள் ஆகும். இது கடந்த ஆண்டு அவர்களுக்கு இருந்ததைவிட 3.2 பில்லியன் பவுண்டுகள் கூடுதலாகும்.

இதேபோல இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டேவிட் மற்றும் சைமன் ரூபன் மூன்றாம் இடத்தையும், லட்சுமி மிட்டல் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

மொத்தமாக, இந்த 134 பில்லியனர்களின் சொத்து மதிப்பு, கடந்த ஆண்டு இருந்ததைவிட 14 சதவிகிதம், அதாவது 658 பில்லியன் பவுண்டுகள் அதிகரித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close