Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'சமூகம் ஏற்றுக்கொள்ள காலமாகும்' - போகோ ஹரம் விடுவித்த பெண்களின் நிலை!

Bokao haram released women

நைஜீரியாவில், மூன்று தினங்களுக்கு முன்பு போகோ ஹரம் தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட 82 பெண்கள், இன்னும் தங்கள் பெற்றோர்களைச் சந்திக்கவில்லை. பல பெற்றோர்களுக்கு இன்னும் தங்கள் குழந்தைகள் மீட்கப்பட்ட செய்தியே சென்றடையாத சூழல் நிலவுகிறது.

நைஜீரிய நாட்டின் வட கிழக்குப் பகுதியில் இருக்கிறது, சிபோக் என்ற சிறு கிராமம். இந்தக் கிராமத்தில் இயங்கிவந்த பள்ளிக்கூடத்தில் இருந்து, 2014-ம் ஆண்டு,  276 பெண்களை போகோ ஹரம் தீவிரவாதிகள் கடத்திச்சென்றனர். அவர்களைப் பாலியல் அடிமைகளாகவும் தங்களுக்குத் தேவையான மற்ற வேலைகளைச் செய்யவும் பயன்படுத்திவந்தனர். அவர்களை மீட்க எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டும் எதுவும் வெற்றிபெறவில்லை. இந்த நிலையில், மூன்று நாள்களுக்கு முன்னர், அரசின் பிடியில் இருந்த ஐந்து போகோ ஹரம் தீவிரவாதிகளை விடுவித்து, 82 பெண்களை மீட்டது அரசாங்கம்.

மீட்கப்பட்ட பெண்களைத் தலைநகர் அபுஜாவில் சந்தித்துப் பேசினார், நைஜீரிய அதிபர் முகமது புஹாரி. மீட்கப்பட்ட பெண்களின் பெயர்கள் மற்றும் விவரங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது அதிபர் அலுவலகம். ஆனால், சிபோக் கிராமத்தில் பெரும்பாலானோர்களுக்கு ட்விட்டர் குறித்து தெரியாது. இதனால், பலருக்கும் இதுகுறித்த விவரம் தெரியவில்லை. தெரிந்தவர்கள், தங்கள் பிள்ளைகளை அழைத்துச்செல்ல முயன்றும்,  மீட்கப்பட்ட பெண்களை அனுப்பிவைக்க அரசு மறுத்துவிட்டது. 

'கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரவாதிகளால் பல்வேறு உடல் மற்றும் மன இன்னல்களுக்கு ஆளான பெண்கள், மீண்டும் பொதுச் சமூக ஓட்டத்தில் எப்படித் தங்களைப் பொருத்திக்கொள்வார்கள்... அவர்களைச் சமூகம் சரியான வகையில் ஏற்றுக்கொள்ளுமா?' என்கிற கேள்வி அரசாங்கத்தைச் சற்று அச்சுறுத்துகிறது. அதனால், அவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து முறையான சிகிச்சையும் மாற்று ஏற்பாடுகளையும் செய்த பின்னரே, பெற்றோர்களிடம் ஒப்படைக்க இருப்பதாக அரசாங்க வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே, கடந்த அக்டோபர் மாதம் விடுவிக்கப்பட்ட 21 பெண்களும் இன்னும் பெற்றோர்களிடம் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close