Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரூ.2000 கோடிக்கு லண்டனில் சொத்து வாங்கியுள்ள மல்லையா!

Vijay Mallya

இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டி இந்திய அரசு எடுக்கும் முயற்சிகளைத் தடுக்க, மல்லையா புதிய முடிவு எடுத்துள்ளார். இங்கிலாந்து ராணியின் வழக்கறிஞர் குழுவில் உள்ள மிகச்சிறந்த வழக்கறிஞர், க்ளாரே மோண்ட்கோமேரியைத் தனது வழக்கறிஞராக அமர்த்தியுள்ளார் மல்லையா. க்ளாரேவின் வாதாடும் திறமை அனைவருக்கும் தெரிந்த ஒன்று. எனவே, மல்லையாவை நாடு கடத்த இந்திய அரசு நிறைய மெனக்கெட வேண்டும் என்று தெரிகிறது. இந்த நிலையில், பிரபல ஆங்கிலச் செய்தி சேனலான 'டைம்ஸ் நவ்', இன்று ஒரு முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், மல்லையாவுக்கு இங்கிலாந்தின் பல்வேறு இடங்களில் உள்ள சொத்துக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பங்களாக்களையும் அதன் சுற்றுப்புறத்தையும் ஒளிபரப்புச்செய்துள்ளது 'டைம்ஸ் நவ்'. இவற்றின் மதிப்பு மட்டும் இந்திய ரூபாயில் 2,000 கோடிகளுக்கு மேல் வருகிறது என அந்தச் செய்தி கூறுகிறது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close