Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீண்டும் சர்ச்சையில் சிக்கியது அமேசான்!

இந்திய தேசியக்கொடியை முழுமையானதாக இல்லாமல், சிதைந்த நிலையில் அச்சடித்து விற்பனைசெய்துவரும் அமேசான் கனடா, தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது.

அமேசான்


பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் தஜிந்தர் பால் பாகா, அமேசான் நிறுவனத்தின் ஆன்லைன் வர்த்தகப் பக்கத்தில், இந்த சர்ச்சைக்குரிய விற்பனை அறிவிப்பைப் பார்த்து, தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

சுவர் அலங்காரம் செய்வதற்கான ‘வால் ஸ்டிக்கர்ஸ்’ பிரிவில், இந்திய வரைபடத்தை முழுமையாக இல்லாமல் அச்சடித்து, விற்பனைக்கு அறிவித்துள்ளது அமேசான் நிறுவனம். இந்திய அரசின் அதிகாரபூர்வ வரைபடத்தைத்தான் அச்சில் வெளியிட வேண்டும். அதைவிடுத்து, அமேசானின் இந்திய வரைபடம் முற்றிலும் மாறுபட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் சீன ஆக்கிரமிப்புப் பகுதிகளை விடுத்து, இந்த வரைபடம் அச்சடிக்கப்பட்டுள்ளது. இதை, ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என பால் பாகா தனது கருத்தைப் பதிவுசெய்துள்ளார். இதுபோல வெளியிடுவதற்கு முன்னர், இந்திய அரசிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும், இல்லையேல், ஒரு கோடி முதல் 100 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.


அமேசான் ஆன்லைன் விற்பனை நிறுவனம், இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்குவது முதல்முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close