Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாகிஸ்தானில் இந்தியரின் தூக்கு - நிறுத்தியது சர்வதேச நீதிமன்றம்

Kulbhushan Jadhav

பாகிஸ்தானில் உளவுபார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த இந்தியரின் தண்டனையைச் சர்வதேச நீதிமன்றம் நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த கடற்படை அதிகாரியான குல்பூஷன் ஜாதவ், தங்கள் நாட்டில் உளவு பார்த்ததாகவும் சதிச்செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறி கைதுசெய்தது பாகிஸ்தான் அரசு. கடந்த 2013-ம் ஆண்டு இந்தியக் கடற்படையில் இருந்து விருப்ப ஓய்வுபெற்று, ஈரானில் உள்ள சாபாகர் துறைமுகத்தில் சரக்குகள் கையாளும் தொழிலில் ஈடுபட்டு வந்தார் ஜாதவ். இவரை, மார்ச் 3-ம் தேதி பாகிஸ்தானின் மேற்கு மாகாணமான பலுஜிஸ்தானில் கைதுசெய்ததாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது.

கராச்சியில் நடைபெறும் பல்வேறு தீவிரவாதச் செயலுக்கு ஜாதவ் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உதவிகளைச் செய்தார் என்ற குற்றச்சாட்டை பாகிஸ்தான் அரசு சுமத்தியது. அதன் பின்னர், இஸ்லாமாபாத் நகரில் நடந்த ரகசிய விசாரணையில், ஜாதவ் உண்மையை ஒப்புக்கொண்டார் எனத் தெரிவித்து, அவருக்குத் தூக்குத் தண்டனை வழங்கி, கடந்த மாதம் 10-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்திய அரசின் தரப்பில் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குல்பூஷன் ஜாதவ், பணிக்காலத்துக்கு முன்னரே ஓய்வுபெற்றுவிட்டதாகவும், பண்டார் அப்பாஸ், சாபாகர் ஆகிய துறைமுகங்களில் லாஜிஸ்டிக்ஸ் தொழில் செய்துவந்ததாகவும் தெரிவித்தது. பாகிஸ்தான் ஆதரவு 'சன்னி' தீவிரவாத அமைப்பான 'ஜெய்ஸ் உல் அதி'த்ஃஆன்' அவரை ஈரான் - பாகிஸ்தான் எல்லையில் இருந்து கடத்திச்சென்று, பாகிஸ்தானிடம் ஒப்படைத்ததாக இந்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், அவரது தூக்குத் தண்டனையை, சர்வதேச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.

குல்பூஷன் ஜாதவின் தூக்குத் தண்டனை நிறுத்திவைக்கப்பட்ட செய்தியை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், குல்பூஷன் ஜாதவின் தாயாரிடம் தொலைபேசி வழியாக தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் சங்கிலியைச் சேர்ந்த இவரின் தந்தை, மும்பை காவல் துறையில் முக்கிய அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close