Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லிபிய கடற் பகுதியில் 1300 அகதிகள் பலி- அதிர்ச்சியூட்டும் ஐ.நா அறிக்கை!

Libyan refugees

லிபிய கடற் பகுதியில், கடந்த வாரம் ஏற்பட்ட படகு விபத்தில் பலியானோர் மற்றும் காணாமல்போனோர் எண்ணிக்கை 250 ஆக உயர்ந்துள்ளதாக, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்மட்டக் குழு தெரிவித்துள்ளது. கடந்த வார இறுதியில், லிபியாவில் இருந்து இரண்டு படகுகளில் அகதிகள் பயணித்தபோது, அதிக எடையின் காரணமாக இரண்டு படகுகளுமே விபத்துக்குள்ளானது. அப்போது, 82 பேர் காணாமல்போனதாகவும், 160-க்கும் அதிகமானோர் இறந்திருக்கலாம் என்றும்  சொல்லப்பட்டது. பின்னர், மீட்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு, கடலில் இருந்து பல பிணங்கள் எடுக்கப்பட்டன. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களோடு சேர்த்து, இந்த ஆண்டில் மட்டும் லிபிய கடற் பகுதிகளில் இதுவரை 1300-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 43 ஆயிரம் பேர் மறுவாழ்வு தேடி, அகதிகளாக கடல் வழி புலம்பெயர்ந்திருக்கிறார்கள். 

இந்த விபத்தில் உயிர் பிழைத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்போர் சொல்லும் கதைகள் ஒவ்வொன்றும், மனதை உலுக்கும்படியாக இருக்கின்றன. 30 பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய சிறு படகுகளில் 150 பேர் வரை ஏற்றியுள்ளனர். மேலும், அகதிகளை நாடு கடத்தும் தரகர்கள், பெண்களுக்குப் பல்வேறு வகையில் பாலியல் தொந்தரவுகளைக் கொடுத்துள்ளனர். தங்கள் இச்சைகளுக்கு உடன்படாத பெண்களைக் கொடூரமாகக் கொன்று கடலில் வீசியுள்ளனர்.

தரமற்ற படகுகளில் அகதிகளை அழைத்துவருவது, படகுகளின் கொள்ளளவுக்கு மேல் அதிகப்படியான ஆட்களை ஏற்றிவருவது போன்றவை, விபத்துகளுக்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன. 'அகதிகளை ஏமாற்றிப் பணம் பிடுங்கி, இறுதியில் அவர்களைக் கொல்லவும் தயங்காத இதுபோன்ற தரகர்களை நம்பி மக்கள் தங்கள் வாழ்வையும் உயிரையும் இழக்கக்கூடாது' என்று ஐ.நா அறிவுறுத்தியுள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close