Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உதவி செய்வதில் சீனாவை முந்திய இந்தியா!

நேபாளத்துக்கு உதவுவதில் டாப் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது இந்தியா. ‘அதிகாரபூர்வ மேம்பாட்டு உதவி’ செய்வதில் முன்னோடியாக இருக்கும் சீனாவை வீழ்த்தி இந்த முறை இந்தியா ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது.

நேபாளம்-இந்தியா


நேபாள நிதி அமைச்சகத்தின் சமீபத்திய அறிவிப்பு அறிக்கையின்படி, அண்டைநாட்டு உறவை மேம்படுத்த உதவும் நாடுகளில் முதன்முறையாக இந்தியா டாப்-5 லிஸ்டில் இடம்பெற்றுள்ளது. இதில், முதலிடத்தில் அமெரிக்காவும் அடுத்தடுத்த இடங்களில் முறையே இங்கிலாந்து, ஜப்பான், சுவிட்சர்லாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.


2015-ம் ஆண்டு ஜூலை முதல் 2016-ம் ஆண்டு ஜூலை வரை மட்டும் இந்தியா, நேபாளத்தின் வளர்ச்சிக்காக 35.76 மில்லியன் அமெரிக்க டாலர்களை அளித்துள்ளது. அதேசமயம், சீனா 0.4% குறைவாகவே நிதியளித்துள்ளது. இந்த வளர்ச்சித் திட்ட உதவிகளில் தொழில்நுட்ப உதவி, உதவித்தொகைகள், பயிற்சி, கல்விச்சுற்றுலா எனப் பல தளங்களிலும் நேபாளத்துக்கு ஆதரவாக இந்தியா செயல்பட்டுவருகிறது.


இவ்வாறாக இந்தியா நேபாளத்தின் நேசவிரும்பி தேசமாக உருவாகிய சமயத்தில், காலனிய ஆட்சியைவிடக் கொடுமையான சீனாவின் ‘ஒரு பெல்ட், ஒரு சாலை’ திட்டத்தில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் நேபாளம் கையெழுத்திட முடிவெடுத்துள்ளது.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close