Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியாவுக்கு 136-வது இடம்

உலக அளவில், பத்திரிகையாளர்கள் சுதந்திரமாகச் செயல்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 136-வது இடம் பெற்றுள்ளது. இதற்கான தர வரிசைப் பட்டியலை, ‘தகவல் சுதந்திரத்துக்கான எல்லைகள் இல்லா நிருபர்கள் அமைப்பு’ வெளியிட்டுள்ளது.

பத்திரிகை சுதந்திரம்


"ஒரு பத்திரிகை எப்போதும் பயமின்றி  பொதுவாழ்வின் குற்றங்களை அம்பலப்படுத்த வேண்டும்" என்கிறார் அண்ணல் காந்தி. ஆனால், உண்மையை உலகுக்கு எடுத்துரைக்கும் முயற்சியில் பத்திரிகையாளர்கள் பலர் தாக்குதல்களுக்கு உள்ளாவதும், பல சமயங்களில் கொலை செய்யப்படுவதும் நாடுகள் பேதமின்றி அதிகரித்துவருகிறது. சமூகத்தில் உண்மையை நிலைநாட்ட தங்கள் இன்னுயிரை நீத்த பல பத்திரிகையாளர்களின் தியாகங்களைப் போற்றுவதற்காகவே, ‘உலகப் பத்திரிகை சுதந்திர நாள்’ ஒவ்வொரு ஆண்டும் மே 3-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் ‘தகவல் சுதந்திரத்துக்கான எல்லைகள் இல்லா நிருபர்கள் அமைப்பு’ உலக அளவில் பத்திரிகையாளர்களுக்கான சுதந்திரம் மிகுந்துள்ள நாடுகளின் பட்டியலை அதிகாரபூர்வமாக வெளியிட்டது. இந்தப் பட்டியலில் நார்வே நாடு முதலிடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு 136-வது இடம்.

பத்திரிகையாளர்களுக்கான பன்முகத்தன்மை, சுதந்திரம், சட்டரீதியான பிரச்னைகள், அரசியல் இடையூறுகள் எனப் பல முக்கிய அம்சங்களைக் கணக்கில்கொண்டு இந்தத் தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த அறிக்கையின்மூலம், உலகம் முழுவதும் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 115 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் இந்தியாவில் மட்டும் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது பத்திரிகைச் சுதந்திரத்தின் அளவீட்டைக் காட்டுகிறது.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close