Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாரணாசி-கொழும்புக்கு இடையே விமான சேவை : மோடி அறிவிப்பு

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக, பிரதமர் மோடி நேற்று இலங்கை சென்றார். அங்கு, கௌதம புத்தரின் பிறந்தநாளான ‘வேசக்’ தினத்தை முன்னிட்டு, ஐ.நா சபையின் சார்பில் நடைபெறும் சர்வதேச மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். 

Modi


அங்கு, நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியா, புத்தருடைய மண். வரும் ஆகஸ்ட் மாதம் முதல் கொழும்பில் இருந்து வாரணாசிக்கு நேரடி விமான சேவையை ஏர் இந்தியா துவங்கும். இதன்மூலம் தமிழ்ச் சகோதர, சகோதரிகள், புத்தருடைய மண்ணுக்கு வரலாம்.

உலகம் முழுவதும் நடக்கும் வன்முறைச் சம்பவங்களுக்கு, புத்தரின் அமைதியே சரியான தீர்வாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். 'புத்தர்' என்ற மிகப்பெரிய பரிசை உலகுக்குக் கொடுத்ததற்காக, எங்களது நாடு மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். இந்தியா உதவியுடன், இலங்கையில் மேலும் 10 ஆயிரம் வீடுகள் கட்டப்படும். மேற்கு, தெற்கு மாகாணங்களில் ஆம்புலன்ஸ் சேவை விரிவுபடுத்தப்படும்" என்று பேசினார்.

அங்கு, தற்போதைய அதிபர் சிறிசேனாவை சந்தித்துப் பேசிய மோடி, முன்னாள் அதிபர் ராஜபக்சேவையும் சந்தித்துப் பேசினார். அதேபோல அங்குள்ள தமிழர்களையும் மோடி சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close