Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குல்பூஷன் தூக்குத் தண்டனை விவகாரம் - பாகிஸ்தான் அரசு பிடிவாதம்..!

குல்பூஷன் ஜாதவ் மரண தண்டனை தொடர்பான வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றுவதற்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் பணியாற்றி வந்த குல்பூஷன் ஜாதவ்வை உளவு பார்த்ததாக அந்நாட்டு ராணுவம் கைது செய்தது. குல்பூஷன் இந்தியாவின் உளவு அமைப்பான ராவிற்கு பணியாற்றுகிறார் என்று குற்றம் சாட்டியது. கைது செய்யப்பட்ட குல்பூஷன் ஜாதவ் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் இந்தியா முழுவதும் எதிரொலித்தது. பாகிஸ்தானின் இந்தச் செயலுக்கு இந்தியா கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தது. குல்பூஷனுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனைக்கு எதிராக திஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. சர்வதேச நீதிமன்றம் மரண தண்டனையை ரத்து செய்து தீர்ப்பு அளித்தது. இருப்பினும் இந்தத் தீர்ப்பை பாகிஸ்தான் ராணுவம் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. தேசப் பாதுகாப்பு விவகாரங்களில் சர்வதேச நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்று பாகிஸ்தான் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close