Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பழி தீர்க்க களமிறங்குகிறாரா பின்லேடனின் மகன்?!

அல் கொய்தா தீவிரவாதி பின் லேடனின் மகன், தனது தந்தை மரணத்துக்கு பழி தீர்க்க அல் கொய்தா இயக்கத்துக்கு தலைமை ஏற்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஒசாமா

அமெரிக்காவுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கிய சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடன் 2011-ம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, அல் கொய்தா இயக்கத்தின் தீவிரவாத நடவடிக்கை குறைந்துள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் அல் கொய்தா இயக்கத்துக்கு பின்லேடனின் மகன் ஹம்சா அடுத்து தலைமை ஏற்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து அமெரிக்க உளவுத்துறை அதிகாரி அலி செளஃபான் கூறுகையில்,' ஹம்சா வெளியிட்ட ஆடியோ பதிவுகளில் ஒசாமா பின் லேடனை பின்பற்றுவது தெளிவாகத் தெரிகிறது.பின்லேடன் பயன்படுத்திய, அதே வார்த்தைகளும் குரல் தோணியும் ஹம்சாவிடம் உள்ளது. மேலும் 'விரைவில் நாங்கள் வருகிறோம். அதற்காக அமெரிக்கா வருத்தப்படும். ஆப்கானிஸ்தான், ஈராக், எனது தந்தை ஆகியோர் மீது அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு நிச்சயம் பழி தீர்க்கப்படும்' என ஹம்சா பின்லேடன் கூறியுள்ளார். இதையடுத்து தற்போது 28 வயது நிரம்பியுள்ள ஹம்சா அடுத்த அல் கொய்தா தலைவராகி தன் தந்தை மரணத்துக்கு பழித் தீர்க்கலாம் எனக் கூறுகிறார் அலி செளஃபான்.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close