Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இது இஸ்லாம் அல்ல' - பாகிஸ்தான் மீது கொந்தளிக்கும் பூட்டோ மகள்

பாகிஸ்தான் அரசின் எம்பிகள் அடங்கிய  'இஸ்லாமிய பாதுகாப்பு குழு' கடந்த இரண்டு நாள்களுக்கு முன் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், 'வரும் ரம்ஜான் மாதம் முழுவதும் பொது இடங்களில் புகைப்பவர்கள், தண்ணீர் குடிப்பவர் மற்றும் உணவு உண்பவர்கள் ஆகியோர் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் எம்.பி தன்வீர்கான் என்பவர் கடந்த ஜனவரி 16-ம் தேதி அன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மேற்கண்ட அறிவிப்புகளைச் சட்டமாக்க தனி நபர் மசோதா தாக்கல் செய்தார். பின்னர், அது மதப் பிரச்னைகளை கையாளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய 'இஸ்லாமிய பாதுகாப்பு குழு'வுக்கு அனுப்பப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரையின்படி, இனிமேல் ரம்ஜான் மாதம் முழுவதும் பொது இடங்களில் தண்ணீர் குடிக்க, புகைக்க, உணவு சாப்பிட தடை விதிக்கும் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதை மீறினால் 500 ரூபாய் அபராதமும் 3 மாதங்கள் சிறையும் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் புதிய சட்டத்தை முன்னாள் பிரதமர் பெனாஷிர் பூட்டோவின் மகளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான பக்தாவர் பூட்டோ கடுமையாக கண்டித்துள்ளார். தன் டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "கடுமையான வெப்பம் வீசிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் தண்ணீர் குடித்தால் தண்டனை என்பது போன்ற கொடுமையான சட்டம் போடுகிறார்கள். இது கண்டிப்பாக இஸ்லாமில் இல்லை. இவர்களின் புதியச் சட்டத்தில் முதியவர்கள், நோயாளிகள், பள்ளிக் குழந்தைகள் போன்றவர்களுக்கு எந்த விலக்கும் அளிக்கவில்லை. சில நாள்களுக்கு முன் மலாலா பள்ளியின் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்பின் தலைவர் தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கிறார். அரசோ பள்ளிக் குழந்தைகளை தண்ணீர் குடிக்கக் கூடாது என மிரட்டிக்கொண்டிருக்கிறது. இவர்கள் இஸ்லாத்துக்கு அவமரியாதை செய்கிறார்கள்" என்று தன் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close