Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குல்பூஷன் ஜாதவ் வழக்கு: சர்வதேச நீதிமன்றம் இன்று விசாரணை!

பாகிஸ்தானின், பலுசிஸ்தான் பகுதியில் பணியாற்றி வந்த குல்பூஷன் ஜாதவ்வை உளவு பார்த்ததாக அந்நாட்டு ராணுவம் கைதுசெய்தது. குல்பூஷன், இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா'வுக்கு பணியாற்றுகிறார் என்று குற்றம் சாட்டியது. கைதுசெய்யப்பட்ட குல்பூஷன் ஜாதவ், பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார்.

Kulbhusan jadav


அங்கு, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாகிஸ்தானின் இந்தச் செயலுக்கு இந்தியா கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தது. இதையடுத்து, நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றத்தில், இந்திய அரசு சார்பில் கடந்த 8-ம் தேதி மனு தாக்கல்செய்யப்பட்டது.


இதை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில் வரும் 15-ம் தேதி துவங்கும் என்று தெரிவித்தது. அதன்படி, மொத்தம் இரண்டு கட்டங்களாக விசாரணை நடைபெற உள்ளது. இன்று நடக்கும் முதல் கட்ட விசாரணையில், இந்தியா தனது வாதத்தை எடுத்து வைக்கலாம். நடைபெறும் இரண்டாம் கட்ட விசாரணையில், பாகிஸ்தான் தனது வாதத்தை எடுத்துவைக்கலாம்.


குறிப்பாக, இந்த விசாரணை நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close